Type to search

கொள்ளுப்பிட்டியவில் சீன விபசார விடுதி : பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு

Hot News NEWS

கொள்ளுப்பிட்டியவில் சீன விபசார விடுதி : பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பு

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

(Chinese women arrested Kollupitiya brothel)

கொள்ளுப்பிட்டியில் சீன பெண்களால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது விபசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீன நாட்டு பெண்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி விபச்சார விடுதி நடத்திச் செல்வதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணை பெற்று மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட பெண்கள் 39, 38, 48, 45 வயதுடையவர்களாகும். குறித்த பெண்கள் வீசா இன்றி சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tags: