Type to search

வலி. வடக்கில் படையினர் வசமிருந்த 33 ஏக்கர் காணி விடுவிப்பு

NEWS

வலி. வடக்கில் படையினர் வசமிருந்த 33 ஏக்கர் காணி விடுவிப்பு

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

வலி. வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளது. (Release 33 acres land Valikamam North)

33 ஏக்கர் காணியை விடுவிக்கும் முகமாக, இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்தப் பகுதியினுள் காடுகள் அற்ற பயன்டுத்தக்கூடிய நிலையிலுள்ள சுமார் 16 வீடுகளும் 40 குடும்பங்களுக்குச் சொந்தமான காணியும் இதனூடாக விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி இந்த கிராம மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறிய நிலையில், தற்பொழுது தமது உறவினர்கள் மற்றும் நலன்புரி முகாம்களிலும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Release 33 acres land Valikamam North


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags:

You Might also Like