Type to search

யாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்

Breaking News Hot News NEWS

யாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்

Share
  • 30
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    30
    Shares

வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident)

கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் நபர், நேற்று காலை மீரிகம வில்வத்த பகுதியில் உள்ள மலர்சாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு 25ஆயிரம் ரூபாவுக்கு சவப் பெட்டி மற்றும் மரண வீட்டுக்கு தேவையான அலங்கார பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.

மரண சடங்குகள் முடிந்த பின்பு பொருட்களை நாளை (இன்று) ஒப்படைப்பதாகவும் கூறியுள்ளார்.

மலர் சாலையின் சேவையாளர்கள் நேற்று காலை சவப்பெட்டியை குறித்த நபரின் வீட்டுக்கு கொண்டு சென்ற போது பிரதேச மக்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் குறித்த நபரின் வீட்டுக்குள் சவப்பெட்டியை மலர் சாலையின் சேவையாளர்கள் வைத்துள்ளனர்.
இதனைப்பார்த்த குறித்த நபரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீட்டில் யாரும் இறக்காத நிலையில் ஏன் எமது வீட்டுக்கு சவப்பெட்டியை கொண்டு வந்தீர்கள் என சவப்பெட்டியை கொண்டு வந்தவர்களிடம் அதிர்ச்சியுடன் கேட்டுள்ளனர்.

உங்கள் வீட்டில் வசிக்கும் நபரே கொள்வனவு செய்தார் என மலர் சாலையின் சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபரிடம் வினவியபோது,

”தனது குடும்பத்தார் தன்னை பொருட்படுத்துவதும் கவனிப்பதுமில்லை. ஆதலால் அவர்களை பயமுறுத்தவே இவ்வாறு செய்தேன்” என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

காரணமின்றி சவப்பெட்டியை வீட்டில் வைத்திருப்பது தவறில்லை என்றாலும் அதனை மீண்டும் திருப்பி கொடுக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பின்னர் சவப்பெட்டியை மலர்சாலைக்கு திருப்பி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பிரதேச மக்களுக்கும், உறவினர்களுக்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites

Tags: