Type to search

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Hot News NEWS

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்

Share
  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    25
    Shares

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus)

பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார்.

ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காவிடின் அவரது பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

உயர் கல்வி அமைச்சர் ஒருவர் பொறுப்பு மிக்க ஒரு சபையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து முழுப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளையும் பாதிக்கும் வித்தில் கருத்துத் தெரிவித்துள்ளமைக்கு புத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிகளின் பெற்றோரும் அமைச்சரின் கருத்துக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites