Type to search

கரந்தெனிய உப தலைவர் கொலையை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்

NEWS

கரந்தெனிய உப தலைவர் கொலையை விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

(Two police groups appointed arrest suspects Karandeniya cheif)

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை தொடர்பாக மற்றைய சந்தேக நபரை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த இரண்டு விசேட குழுக்களும் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

கொலை தொடர்பாக ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார், அவர் வௌிநாட்டில் மறைந்து வாழும் பாதாள உலக உறுப்பினர் கொஸ்கொட சுஜியின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு உப தலைவரை சுட்டுக்கொல்வதற்காக இன்னொருவருடன் வந்த சந்தேகநபர் ஊருகஸ்மங்ஹந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தருணத்தில் இன்று காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

22 வயதான குறித்த சந்தேகநபரின் பயணப்பையில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிக்கான 30 ரவைகள் மற்றும் மகஸின் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நேற்றிரவு ஊருகஸ் சந்தி – கொரகீய பிரதேசத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் வீடுதிரும்பிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

(Two police groups appointed arrest suspects Karandeniya cheif)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares