Type to search

16 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்ட பூச்சாடி(புகைப்படம் உள்ளே)!

France WORLD

16 மில்லியன் யூரோக்களுக்கு விற்கப்பட்ட பூச்சாடி(புகைப்படம் உள்ளே)!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸில் பூச்சாடி ஒன்று 16.2 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆச்சரியமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Flower vase sold 16 million euros

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குவளை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸில், ஏலத்துக்கு விடப்பட்டது. குறித்த குவளை சீனாவில், 1735-1796 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. சீன மன்னன் Emperor Qianlong க்காக இந்த குவளை தயாரிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த குவளை 16.2 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

பரிஸில் குறித்த வெளிநாட்டு பொருட்களுக்கான ஏலம் விடும் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஒரு சீன நாட்டு பொருள் கூடிய விலைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த குவளையை விற்பனைக்கு கொண்டுவந்த நபர் தெரிவிக்கும் போது, இது ஒரு சப்பாத்துப் பெட்டிக்குள் பல சகாப்தங்களாக கிடந்தது எனவும் என்னுடைய தாத்தா இதனை முன்னதாக வைத்திருந்தார் எனவும் தெரிவித்தார்.

மேலும், அவருக்கு பளிச்சிடும் வர்ணங்கள் பிடிக்காததால் இதனை நீண்ட காலங்களாக மூடியே வைத்திருந்தார்!’ என குறிப்பிட்டார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares