Type to search

பாரிஸ் தாக்குதலாளி பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது!

France Top Story

பாரிஸ் தாக்குதலாளி பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

நேற்று பரிஸ் 10 ம் வட்டாரத்தில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்து அச்சுறுத்தல் விடுத்த நபர் சற்று நேரத்தில் கைது செய்யப்பட்டான். Paris attacker details revealed

குறித்த நபர் பத்தாம் வட்டாரத்தின் rue des petits stables வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றுக்குள் புகுந்து மூன்று நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தான். கட்டிடத்தை சுற்றி வளைத்த BRI படையினர், சிறிது நேரத்துக்குள்ளாக குறித்த நபரினை அதிரடியாக கைது செய்தனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கைது செய்யப்பட்ட நபர் 26 வயதுடைய மொராக்கோ நாட்டு குடியுரிமை கொண்டவன் என தெரியவந்துள்ளது. பணயக்கைதிகளை பிடித்துவைத்துக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்தமைக்குரிய காரணம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

குறித்த நபரினை காவல்துறையினர் முன் எப்போதும் அறிந்திருக்கவில்லை எனவும், S கண்காணிப்பு பட்டியலில் அவன் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அந்த கட்டிடத்துக்குள் எவ்வித வெடிபொருட்களும் இல்லை எனவும், குறித்த நபர் கத்தி ஒன்றினையும், போலி துப்பாக்கி ஒன்றினை மட்டுமே வைத்திருந்தான் எனவும் அறியமுடிகிறது.

குறித்த நபர் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் போது தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை எனவும், ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்களை வழங்கியுள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: