Type to search

இன்று பாரிஸில் போக்குவரத்து முற்றிலும் தடை- பயணிகளுக்கு எச்சரிக்கை!

France France Head Lines WORLD

இன்று பாரிஸில் போக்குவரத்து முற்றிலும் தடை- பயணிகளுக்கு எச்சரிக்கை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

சமிக்ஞையில் இடம்பெற்ற பழுது காரணமாக இன்று காலை முதல் பரிஸின் Saint-Lazare ரயில் நிலையத்தில் இருந்து அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. SNCF rayil services canceled- signal problem

இதனால், SNCF முதல் கட்டமாக, குறித்த நிலையத்தில் இருந்து செயற்படும் L, J வழி பயணங்களையும், Intercités மற்றும் TER பயணங்களையும் பிற்தள்ளி போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், Paris Saint-Lazare இல் இருந்து La Garenne Colombes வரையும், Paris Saint-Lazare இல் இருந்த La Défense Grande Arche நிலையம் வரையுமான சேவைகள் தடைப்பட்டுள்ளன.

சமிக்ஞை விளக்குகள் பழுது காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது என அறிய முடிகின்றபோதும், மிகச்சரியான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும், இதுகுறித்து SNCF பொது நிர்வாகி Alain Krakovitch தெரிவிக்கும் போது ‘போக்குவரத்து தடைப்பட்டதற்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை’ என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: