Type to search

சவக்குழியில் தங்க பல் திருட்டு!

France Head Lines

சவக்குழியில் தங்க பல் திருட்டு!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

பிரான்ஸில், சவப்பெட்டியில் இருந்து தங்கப்பல் ஒன்றினை திருடிய மூவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3 robbers stole gold tooth fromm grave

கல்லறையிலிருந்து சவப்பெட்டியை தோண்டி எடுத்து அதிலிருந்து தங்கப்பல் ஒன்றை திருடிய சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தாலும், நீண்ட காலமாக விசாரணைகள் இடம்பெற்று தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, பொபினியில் உள்ள cimetière de Pantin கல்லறையில் மூன்று நபர்கள் கையுறை அணிந்தும், தலையில் டோர்ச் விளக்கு அணிந்த நிலையிலும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்திருந்த காரிற்குள் தங்கத்திலான பற்கள், மேலும் சில நகைகள் என மொத்தம் 10,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், குறித்த 3 கொள்ளையர்களும் பொபினி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பரிஸின் புறநகர் பகுதிகளில் கடந்த 2012, 2013, 2014 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக திருடர்களால் கல்லறைகள் தோண்டப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: