Type to search

டிரம்பை கோபத்திற்குள்ளாக்கிய பிரான்ஸ்!

France Trending WORLD

டிரம்பை கோபத்திற்குள்ளாக்கிய பிரான்ஸ்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலையற்ற வெளியுறவுக் கொள்கையை கொண்டிருப்பதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லெ டிரையன் விமர்சித்துள்ளார். France foreign minister criticize Trump’s foreign policy
இதுகுறித்து அவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

G7 நாடுகளின் உச்சி மாநாட்டில், G7 நாடுகள் அமைப்பில் ரஷ்யாவை மீண்டும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கனடா அதிபர் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப், மாநாட்டில் இருந்து பாதியிலேயே சென்று விட்டார். பல காலமாக நட்புறவுடன் இருக்கும் நாடுகளின் தலைவர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதேசமயம், வடகொரியாவின் சர்வாதிகாரத் தலைவரான அதிபர் கிம் ஜோன் உன்னைச் சந்தித்து, ஆரத்தழுவி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கிம் ஜோ உன் உறுதியளித்தார். உண்மையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு, அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் ட்ரம்ப்பின் உத்திகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.

இதற்கு முன், அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக கிம் ஜோங் உன்னின் தந்தையும் அறிவித்திருந்தார். அது, அறிவிப்புடன் நின்று விட்டது. எனவே, அணு ஆயுதங்களைக் கைவிடும் திட்டத்தை எந்த அளவுக்கு வடகொரிய அதிபர் சாத்தியப்படுத்தப்போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது என்றார் அவர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: