Type to search

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

France France Head Lines WORLD

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. France terrorist attack planned 2 persons arrested

இது தொடர்பாக Seine-et-Marne இல் வைத்து 21 மற்றும் 22 வயதுடைய இரு நபர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து கூரான கத்தி மற்றும் சில வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர்களை DGSI படையினர் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் பயங்கரவாத தாக்குதலுக்கு போடப்பட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காவற்துறையினர், ‘குறித்த இரு நபர்களின் தாக்குதல் திட்டம் குறித்து மிக தெளிவாக அறியமுடியவில்லை!’ என தெரிவித்தனர்.

குறித்த இருவரும் நண்பர்கள் எனவும், இவர்களை உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் முன்னதாக அறிந்திருக்கவில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர். இதுதவிர இருவரும் தீவிர மத அடிப்படைவாதம் கொண்டவர்கள் எனவும் தற்போது முன் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: