Type to search

பிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்!

France France Top Story Trending News WORLD

பிரெஞ்சு பேச தெரியாததால் குழந்தையுடன் வந்த நபர் மீது தாக்குதல்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

3 வயது மகனுடன் வந்த நபர் ஒருவருக்கு சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.  3 year old son’s father attack France

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு செந்தனியின், ஓல்னே சூ பூவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 9.30 மணி அளவில் நபர் ஒருவர் தனது 3 வயது மகனுடன் காரில் பயணமாகி கொண்டிருக்கும்போது, வீதி சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்காக காத்து கொண்டிருந்தார்.

அச்சமயம் இரும்புக்கம்பிகள் மற்றும் கட்டைகளுடன் சூழ்ந்துகொண்ட சில நபர்கள் காருக்குள் இருந்த நபரை வெளியே இழுத்து ரொம்பவே தாக்கியுள்ளனர். ஆனால், காருக்குள் இருந்த அவரது மூன்று வயது மகன் எவ்வித காயங்களுக்கும் உள்ளாகவில்லை.

சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய ஐவரை கைது செய்துள்ளனர். காயமடைந்த அந்த நபர் சிரிய நாட்டைச்சேர்ந்தவர் எனவும், பிரெஞ்சு மொழி பேச முடியாதவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதலுக்குரிய காரணம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: