Type to search

அரச பணத்தை சுய தேவைக்கு பயன்படுத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி!

France France Head Lines WORLD

அரச பணத்தை சுய தேவைக்கு பயன்படுத்தும் பிரான்ஸ் ஜனாதிபதி!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

இமானுவேல் மக்ரோன் வெறும் 110 Km பயணிப்பதற்காக ஜனாதிபதியின் அரச விமானத்தை பயன்படுத்தியுள்ளமை குறித்த சர்ச்சை ஒன்று தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. France president macron spend government money personal use

மக்ரோன் La Roche-sur-Yon இலிருந்து Rochefort நகருக்கு விமானத்தில் பயணித்துள்ளார். குறித்த இரு நகரங்களுக்கிடையே பயணிக்க வெறுமனே 35 நிமிடங்கள் (110 Km) மாத்திரமே எடுத்துக்கொள்ளும் நிலையில், ஜனாதிபதி விமானத்தில் பயணித்துள்ளமை சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மீது முன்னதாகவே ‘பணக்கார ஜனாதிபதி’ எனும் குற்றச்சாட்டு பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இது தவிர, மக்ரோன் எலிசே மாளிகையில் உணவு தயாரிக்க 500,000 யூரோக்கள் செலவு செய்துள்ளார் என ஒரு சர்ச்சை முன்னர் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலேனிய ட்ரம்ப் ஆகியோர் பிரான்ஸுக்கு வந்திருந்தபோது 50,000 யூரோக்கள் செலவில் ஈஃபிள் கோபுரத்தில் வைத்து உணவு அளித்ததாகவும் சர்ச்சை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: