Type to search

பிரான்ஸில் இனி வாகனங்களை 80Km/h க்கு மேலாக செலுத்த முடியாது!

France France Top Story WORLD

பிரான்ஸில் இனி வாகனங்களை 80Km/h க்கு மேலாக செலுத்த முடியாது!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸில், நீண்ட நாட்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த வேகக்கட்டுப்பாடு தொடர்பாக நிரந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வேகக்கட்டுப்பாடு ஜூலை 1 முதல் செயற்படுத்தப்பட இருக்கிறது. drive vehicle 80Kmph France

பிரான்ஸின் இரண்டாம் கட்ட வீதிகளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 90 கிலோமீட்டர்கள் பயணிக்க முடியும். இந்நிலையில் இவ் வேகத்தினை மணிக்கு 80 கிலோமீட்டர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு முன்னதாகவே அரச தரப்பினால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு தரப்பினரின் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிகையினால் இந்த முடிவு பிற்போடப்பட்டிருந்தது. ஆனாலும், கடந்த மாதம் இந்த வேகப்பட்டுப்பாடு செயற்படுத்தப்பட்டிருந்த போது வீதி விபத்துக்களும், விபத்தின் போது ஏற்படும் உயிரிழப்புக்களும் கணிசமாக குறைந்திருந்தன.

இந்நிலையில், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இது பற்றி பிரதமர் எத்துவா பிலிப் தெரிவிக்கும்போது, ‘பிரபலத்தன்மையை இழக்க நான் தயார். ஆனால் இந்த புதிய கட்டுப்பாட்டினால் வருடத்துக்கு 300 இலிருந்து 400 உயிர்கள் பாதுகாக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த புதிய வேகக்கட்டுப்பாடு மொத்தமாக 400,000 கிலோமீட்டர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: