Type to search

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஸ்பெயின் அதற்கு உதவிய பிரான்ஸ்!

France France Head Lines WORLD

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஸ்பெயின் அதற்கு உதவிய பிரான்ஸ்!

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

குடியேற்றவாசிகளை ஏற்றிய மூன்று கப்பல்களும் ஸ்பெயின் வெலென்சியா துறைமுகத்தை சென்றடைந்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். France helped 629 refugees

இதற்கமைய, அகதிகளை ஏற்றிய மூன்று கப்பல்களிலும் சுமார் 600 குடியேற்றவாசிகள் வெலென்சியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் நோக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த சுமார் 629 அகதிகளைஇத்தாலியும், மோல்டாவும் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்த நிலையில் நடுக்கடலில் கடந்த 9 நாட்களாக அவர்கள் தத்தளித்தனர்.

படகுகளில் இருந்தவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 629 அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க ஸ்பெயின் அரசு சம்மதித்த நிலையில் அவர்கள் கட்டம் கட்டமாக நேற்று ஸ்பெயினை வந்தடைந்தனர்.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் ஸ்பெயின் வலென்சிய நகரை அகதிகள் வந்தடைந்தனர்.

இவ்வாறு சுமார் 600 அகதிகளும், தொண்டு நிறுவன பணியாளர்கள் 30 பேரும் வலென்சியா துறைமுகத்தை வந்தடைந்துள்ளனர்.

வெலேன்சியாவை வந்தடைந்த அகதிகளில், 123 சிறுவர்களும், 11 குழந்தைகளும், 7 கர்பிணிதாய்மார்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு வருகைதந்த 600 குடியேற்றவாசிகளும் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளனர்.
அகதிகள் தற்போது சிறந்த நிலையில் இருப்பதாகவும் சிலரில் உடம்பில் எரிகாயங்கள் காணப்படுவதாகவும் ஸ்பெயின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெயினின் வெலன்சியாவில் தரையிறங்கியுள்ள அகதிகளுக்கான உணவு, மருத்துவம், தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளைத் தொண்டு நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

குறித்த அகதிகளுக்கு பணிபுரிவதற்காக தொண்டுநிறுவனங்களை சேர்ந்த 2320 தன்னார்வப் பணியாளர்கள் வெலன்சியாவிற்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு வெலேன்சியாவை சென்றடைந்துள்ள அகதிகள் முறையான விசாரணைகளுக்கு பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஸ்பெயின் அரசாங்கம் அறித்துள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: