Type to search

பிரான்ஸ் மக்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி!

France France Head Lines WORLD

பிரான்ஸ் மக்களே உங்களுக்கு ஓர் நற்செய்தி!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

இன்று செவ்வாய்க்கிழமை, கோடைகாலத்தின் முன்னோட்டம் போல் பிரான்ஸ் நாடு முழுவதும் வெப்ப காலநிலை ஆரம்பிக்கின்றது. இந்த நாட்களில் 25°c இல் இருந்து 28°c வரை வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. France weather changes- summer celebration started

இம்மாத ஆரம்பத்தில் கொட்டித்தீர்த்த மழையைத் தொடர்ந்து, இன்று முதல் சீரான வெயில் அல்லது கடும் வெப்பம் நிலவும் என பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று ஜூன் 19 ஆம் திகதி, பிரான்ஸின் வடக்கு மாவட்டங்களில் 25°c வெப்பமும், தெற்கு மாவட்டங்களில் 28°c வெப்பமும் நிலவும், மார்செ நகரில் இது 30 வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21 ஆம் திகதி கோடை காலம் ஆரம்பிக்கின்றது என்றபோதும், சில நாட்களுக்கு முன்பாகவே தகதகக்கும் வெயில் ஆரம்பிக்கின்றது.

இதுதவிர. தொடர்ந்து வரும் நாட்களிலும் வெயில் அதிகரித்துச் செல்லும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடைகால சிறப்பு நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள் என பல ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: