Type to search

15 பில்லியன் யூரோ வர்த்தகம்!

France France Head Lines WORLD

15 பில்லியன் யூரோ வர்த்தகம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

2020 ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸ் – இந்தியா நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 15 பில்லியன் யூரோக்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. India wants increase business 1500 crore betweenn France- India

4 நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அறிவியல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர்கள் வசிக்கும் விடுதிக்கு சென்ற சுஷ்மா, பின்னர் இந்திய வம்சவழியினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்திய தூதரகம் தயாரித்த, இந்தியாவில் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்கள் குறித்த கையேட்டை வெளியிட்டார். அப்போது பேசிய சுஷ்மா ஸ்வராஜ், முதல் உலகப் போரில் பிரான்ஸுக்கு ஆதரவாக பங்கேற்ற ஆயிரக்கணக்கான இந்திய வீரர்களின் தியாகத்தை கௌரவிக்கும் விதமாக பாரீஸ் அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கூட்டு ஒத்துழைப்பினால் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரு தரப்பு வர்த்தகம் 9.85 பில்லியன் யூரோவாக இருந்தது. இந்நிலையில், 15 பில்லியன் யூரோ அளவுக்கு வர்த்தகத்தை மேம்படுத்த நாம் இன்னும் கூடுதலாக செயல்பட வேண்டியுள்ளது என சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்” என்று ரவீஷ் குமாரின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுஷ்மா ஸ்வராஜ் இதுதொடர்பாக மேலும் கூறுகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அகிய இரு சந்தர்ப்பங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் வந்ததாலும், பிரான்ஸ் அதிபர் இந்தியா வந்ததாலும் இருநாட்டு உத்திசார் ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்தியா – பிரான்ஸ் இடையே உத்திசார் நட்புறவு ஏற்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: