Type to search

பிரான்ஸில் இலவசமாக இனி நீச்சலடிக்க வாய்ப்பு!

France France Head Lines WORLD

பிரான்ஸில் இலவசமாக இனி நீச்சலடிக்க வாய்ப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

இன்று புதன்கிழமை (ஜூன் 20) முதல், La Villette ஆற்றில் பொதுமக்களுக்காக இலவச நீச்சல் தடாகம் திறக்கப்பட்டுள்ளது. swim freely La Villette France- open June 20

கோடைகாலத்தை வரவேற்கும் முகமாக கடந்த வருடம் நீச்சல் தடாகம் இங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வருடமும் கோடை காலம் நாளை முதல் (ஜூன் 21) ஆரம்பிக்கின்றதை அடுத்து, இம்முறையும் இலவச நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணியில் இருந்து இரவு 9 மணிவரை தினமும் இந்த தடாகம் திறக்கப்படும். இது 16 மீட்டர்கள் அகலமும், 100 மீட்டர்கள் நீளமும் கொண்ட மிக விசாலமான நீச்சல் தடாகம். சிறுவர்களுக்காக 1.6 மீட்டர்கள் ஆழம் கொண்ட தனி தடாகமும் உண்டு.

அதில் இறங்குவதற்கு முன்னர் குளிப்பதற்குரிய தனி குளியலறையும், கழிவறையும் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9 ஆம் திகதி வரை இந்த நீச்சல் தடாகம் திறந்திருக்கும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: