Type to search

ஜூலை மாதம் முதல் அனைவரும் விலைக்கழிவுடன் பயணிக்கலாம்!

France France Top Story WORLD

ஜூலை மாதம் முதல் அனைவரும் விலைக்கழிவுடன் பயணிக்கலாம்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

கடந்த ஜூன் 12ம் திகதி Gif-sur-Yvette பகுதியில் RER B தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதனைத்தொடர்ந்து RER B சேவைகள் அப்பகுதியில் சீராக இயங்கவில்லை. இந்நிலையில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக RATP வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 50 percent discount forr travelers France

Saint-Rémy-lès-Chevreuse, Chevreuse, Saint Aubin, Magny-les-Hameaux, Choisel, Milon-la-Chapelle, Saint-Lambert மற்றும் Gif-sur-Yvette ஆகிய நகரங்களில் வசிக்கும் RER B பயனாளர்களுக்கு மாத்திரம் இந்த விலைக்கழிவு வழங்கப்பட உள்ளது.

ஜூன் மாத நவிகோ அட்டையின் விலையில் 50 வீதம் கழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, குறித்த நகரங்களை கடக்கும் RER B ஜூலை மாத நடுப்பகுதியில் சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து இடம்பெற்ற நாளில் இருந்து அடுத்த 6 நாட்கள் Orsay இல் இருந்து Saint-Rémy-lès-Chevreuse நகரங்களுக்கிடையே போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

ஏனைய நகரங்களுக்கிடையேயான போக்குவரத்து முழுதாக சீரடைய ஜூலை நடுப்பகுதி வரை நேரம் எடுக்கும் எனவும் RATP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: