Type to search

சிகரெட்டால் இடம்பெற்ற கத்திக்குத்து!

France France Head Lines WORLD

சிகரெட்டால் இடம்பெற்ற கத்திக்குத்து!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் Haute-Garonne நகரில் சிகரெட் வழங்க மறுத்த காரணத்தால் நபர் ஒருவர் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் ரயில் நிலையத்துக்கு அருகே, நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. person attacked forr ask cigarette

Saouzelong நிலையத்துக்கு அருகே நின்றிருந்த நபர் ஒருவரிடம், எதிரே வந்த நபர் ஒருவர் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கூரான கத்தி ஒன்றின் மூலம் தாக்கியுள்ளார். அதன் பின்னர் அந்த தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த நபர் கைகளால் காயத்தை பிடித்துக்கொண்டு, 100 மீட்டர்கள் வரை நடந்து சென்று, பிறிதொரு நபரிடம் நடந்ததைக் கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: