Type to search

பெரிய கொள்ளை கும்பல் கைது!

France France Head Lines WORLD

பெரிய கொள்ளை கும்பல் கைது!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

கண் சிமிட்டும் நொடிக்குள் விமான நிலைய தரிப்பிடத்தில் இருந்து ஆடம்பர கார்களை திருடும் கொள்ளையர்களை காவல்துறையினர் பொறி வைத்து பிடித்துள்ளனர். Évry France police arrest car robbery group

கடந்த செவ்வாய்க்கிழமை Évry நகரில், ஒன்பது இளம் கடத்தல்காரர்களை சுற்றி வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து ஆடம்பர மகிழுந்தான லாண்ட் ரோவர் (Land Rover) கார்களை ஒரு சில நிமிட இடைவெளிக்குள் திருடிச்சென்றுள்ளனர்.

இதுவரை இவர்கள் மொத்தமாக 68 அதேவகை கார்களை திருடியுள்ளனர். ஒவ்வொரு நாள் இரவிலும் பரிஸின் புறநகர் வீதிகளுக்குள்ளால் குறித்த கார்களை கடத்தியுள்ளனர். கடத்திய கார்களை ஆப்பிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

மிகவும் பாதுகாப்பு கொண்ட லாண்ட் ரோவர் வகை கார்களை இவர்கள் மிகுந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பை உடைத்துள்ளனர். கடத்தல்காரர்கள் அனைவரும் 18 தொடக்கம் 22 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Val-de-Marne மாவட்டம் முழுவதும் கடந்த ஜனவரியில் இருந்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு செய்து, மொத்த கொள்ளையர்களையும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: