Type to search

பிரான்ஸில் விரைவில் நிறுத்தப்படும் பிரபல சேவை!

France France Head Lines WORLD

பிரான்ஸில் விரைவில் நிறுத்தப்படும் பிரபல சேவை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஏழு வருடங்களின் பின்னர், பரிசில் வாடகை கார் சேவையான Autolib சேவைகள் ஜூலை 2 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட இருக்கின்றது. முன்னதாக, நேற்று திங்கட்கிழமை முதல் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. Autolib services stop July 2

ஆனால் தற்போது வரும் ஞாயிற்றுக்கிழமை 1 ஆம் திகதி வரை சேவைகள் வழமைபோல் இயங்கும் எனவும், ஜூலை 2 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து Autolib முற்றாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை அவர்களது இணையத்தளம் ஊடாக தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர். மாதாந்த சந்தாதாரருக்கு பணம் திரும்ப வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Bolloré நிறுவனத்துடன் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டவுடன் இச் சேவை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே Autolib சேவைகள் நஷ்டத்தில் இயங்கி வந்தமை யாவரும் அறிந்ததே. இதனால் 300 மில்லியன் யூரோக்கள் வரை நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஜூலை 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் Autolib தரிப்பிடங்கள் அகற்றும் பணிகள் இடம்பெற்று, ஜூலை 31 ஆம் திகதிக்குள் முற்றாக அகற்றப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: