Type to search

சீனாவுடன் இணைந்து விண்வெளி துறைகளை மேம்படுத்தும் பிரான்ஸ்!

France France Head Lines WORLD

சீனாவுடன் இணைந்து விண்வெளி துறைகளை மேம்படுத்தும் பிரான்ஸ்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் பிரதமர் எடுவர்ட் ஃபிலிப் நேற்று பெய்ஜிங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கைச் சந்தித்துப் பேசினார். France PM meet china president

இச்சந்திப்பின்போது, ஷிச்சின்பிங் கூறியதாவது,
சீன-பிரான்ஸ் உறவை வளர்ப்பதற்கு பிரான்ஸ் அளித்து வரும் முக்கியத்துவம் இரு நாட்டுறவின் உயர் நிலையையும் காட்டுகிறது.

பிரான்ஸுடன் இணைந்து, சீன-பிரான்ஸ் பன்முக நெடுநோக்கு உறவின் உள்ளடக்கங்களைத் தொடர்ச்சியாக அதிகரித்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதற்கு முன்மாதிரியாக சீன-பிரான்ஸ் உறவை வளர்க்க சீனா விரும்புகிறது என தெரிவித்தார்.

இது தொடர்பாக ஃபிலிப் பேசுகையில்:
பிரான்ஸ்-சீன உறவில் நம்பிக்கை வைத்துள்ளது பிரான்ஸ். இதனால் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை ஆழமாக்கி, விமான மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை முன்னெடுக்க விரும்புகிறது.

“ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற முன்மொழிவு, எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் ஒத்துழைப்பு யோசனையாகும். அது, முழு மனித குலத்தின் நலன்களுக்கானது என்று தெரிவித்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares