Type to search

பிரான்ஸில் பிரபல நூலகம் எரியூட்டப்பட்டது!

France France Head Lines WORLD

பிரான்ஸில் பிரபல நூலகம் எரியூட்டப்பட்டது!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

La Courneuve இல் உள்ள பிரபலமான நூலகம் ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணி அளவில் எரியூட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Famous library burned La Courneuve France

இது தொடர்பாக நூலகத்தினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘இது மிகவும் வருத்தமளிக்கும் செயலாகும், La Courneuve இல் வசிக்கும் மக்களின் மிக பிடித்தமான நூலகம் இது’ என குறிப்பிட்டார்.

250 சதுர மீட்டர்கள் அளவிலான இந்த நூலகம் எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. புத்தகங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இச்சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதால், குற்றவாளிகளை இலகுவில் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: