Type to search

ஜூலை மாதத்திலும் தொடருமா பணி பகிஷ்கரிப்பு?

France France Head Lines WORLD

ஜூலை மாதத்திலும் தொடருமா பணி பகிஷ்கரிப்பு?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ரயில் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு மே, ஜூன் மாதத்தைத் தொடந்து ஜூலை மாதத்திலும் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, முதல் கட்ட பணி பகிஷ்கரிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. First weekend holidays affected french rail strikes

தொடரூந்து தொழிலாளர்கள், கோடை கால விடுமுறை ஆரம்பித்து வரும் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, ஜூலை 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில், பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.

தொழிற்சங்கங்கள் இரண்டாக பிரிந்ததைத் தொடர்ந்து, CFDT-Cheminots உட்பட சில தொழிற்சங்கங்கள் கோடை விடுமுறையில் தாம் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

அதேவேளை, அதிகளவான தொழிலாளர்களை கொண்ட CGT தொழிற்சங்கம் தொடர்ந்தும் தங்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக திட்டமிடப்பட்ட இரு மாதங்களுக்கான பணி பகிஷ்கரிப்பு நேற்று புதன்கிழமை ஜூன் 27 மற்றும் இன்று ஜூன் 28 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.

அதேவேளை, நேற்று பணி பகிஷ்கரிப்பில் மிக மிக குறைந்த அளவிலான ஊழியர்களே ஈடுபட்டுள்ளனர். அத்துடன், அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளும் முற்றாக தோல்வியில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: