Type to search

பிரான்ஸில் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கான நற்செய்தி!

France France Head Lines WORLD

பிரான்ஸில் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கான நற்செய்தி!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

இவ் வருடம் நவிகோ அட்டையை விலையேற்ற போவதில்லை என Ile-de-France Mobilités தலைவரும், மாகாண முதல்வருமான Valérie Pécresse அறிவித்துள்ளார். France navigo card price increase

இது தொடர்பாக அவர் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ‘இந்த நல்ல செய்தியை அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமையடைகிறேன். 2018 ஆம் ஆண்டில் நவிகோ அட்டை விலையேற்றமடையாது. €75.20 விலையே இவ்வருடம் முழுவதும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நவிகோ அட்டை கடந்த வருடம் இரண்டு தடவைகள் விலையேற்றம் அடைந்ததைத் தொடர்ந்து, இவ்வருடமும் (2018) விலையேற்றம் அடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவிகோ அட்டை விலை ஏற்றப்படாது என Valérie Pécresse அறிவித்துள்ளார்.

இதுதவிர, வருகின்ற 2019 ஆம் ஆண்டு முதல் புதிதாக முற்று முழுதாக குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட புதிய பேரூந்துகள் இயக்கப்படும்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வருடாந்தம் 480 மில்லியன் யூரோக்களுக்கு நவிகோ விற்பனையாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: