Type to search

அகதிகளை பிரான்ஸுக்கு அழைக்கும் ஜனாதிபதி!

France France Head Lines WORLD

அகதிகளை பிரான்ஸுக்கு அழைக்கும் ஜனாதிபதி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

ஜனாதிபதி மக்ரோன், ‘மேலும் சில அகதிகளை பிரான்ஸுக்கு அழைக்க உள்ளோம்!’ என நேற்று தெரிவித்துள்ளார். President Macron accepts lifeline ship refugees

234 அகதிகளுடன் Lifeline எனும் கப்பல், இத்தாலி கடற்பரப்பில் நிற்க, இத்தாலி அரசு அகதிகளை அனுமதிக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து, நேற்று வத்திக்கானுக்குச் சென்ற இம்மானுவல் மக்ரோன், போப் ஆண்டவருடன் சந்திப்பை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் சந்திப்பை மேற்கொண்டார்.

அப்போது, ‘Lifeline’ கப்பலில் உள்ள அகதிகளில் சிலரை பிரான்ஸ் ஏற்றுக்கொள்கிறது எனவும் அதற்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன’ எனவும் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் என்றுமே ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகளுக்கு அனுமதி மறுத்ததில்லை. Lifeline அகதிகளை, ஒவ்வொரு ஐரோப்பிய நாடுகளும் பிரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே ஐரோப்பிய நாடுகளுக்கான ஒற்றுமையை குறிக்கும் எனவும் மக்ரோன் அறிவித்துள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: