Type to search

நீதிமன்றத்தில் தீவிபத்து- 600 பேர் பாதிப்பு!

France France Top Story WORLD

நீதிமன்றத்தில் தீவிபத்து- 600 பேர் பாதிப்பு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

பிரான்ஸின் தலைநகரான வடக்கு பரிஸிலுள்ள புதிய பலாஸ் டி நீதி மன்றத்தின் 29 ஆவது மாடியில் நேற்று மதியம் தீப்பிடித்தது. France Palais de Justice law courts fire

உடனடியாக அந்த மாடியிலிருந்த 600 பேர் வெளியேற்றப்பட்டனர்.

அந்த கட்டிடத்திற்கு வெளியே இருந்த மின் பெட்டியில் இருந்து திடீரென ஏற்பட்ட நெருப்பினாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். ஆனால் நெருப்பு அதிர்ஷ்டவசமாக உள்ளே பரவவில்லை.

பாதுகாப்பு விடயங்களுக்காக உடனடியாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதுடன் இப்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லை எனவும் அந்த தீ விபத்தின் உண்மையான காரணம் இன்னும் கண்டறியவில்லை எனவும் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பேட்டியில் தெரிவித்தார்.

மேலும் அவர் தீயானது மேல் தளத்தில் பரவியது எனவும் தெரிவித்தார்.

29 ஆவது தளத்திலிருந்து 38 ஆவது தளம் வரை அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: