Type to search

பிரான்ஸில் இளைஞர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட இராணுவ பயிற்சி!

France France Head Lines WORLD

பிரான்ஸில் இளைஞர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட இராணுவ பயிற்சி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

பரிஸ் இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்வது கட்டாயம் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. பிரான்ஸில் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும், ராணுவத்தில் பயிற்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. France youth forced_to join army

இதன் மூலம் இளைஞர்களிடையே தேச பக்தி, சமூக பொறுப்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கும் என அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக, இராணுவத்தில் கட்டாய ஒரு மாத பயற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் தங்களது சமூக பொறுப்பை உணர்ந்து கொள்ள முடியும். போலீஸ், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து இந்த பயிற்சி வழங்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, சுய விருப்பப் பயிற்சி. இதில் விருப்பப்படும் இளைஞர்களுக்கு மட்டும், இராணுவத்தில் ஆண்டுக்கு குறைந்தது 3 மாத பயிற்சி வழங்கப்படும். மேலும் விரும்பும் இளைஞர்கள், சுற்றுச்சூழல் சமூக பணிகளிலும் பயிற்சி பெறலாம்.

இப்பயிற்சிக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் ஏற்கனவே, 1996ல் இத்திட்டம் கொண்டு வரப்பட்டு, 1997ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது 21 ஆண்டுகளுக்குப்பின், பிரான்ஸ் இத்திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் விருப்பமுள்ளவர்கள் மட்டும், இராணுவத்தில் சேரும் முறை உள்ளது. கட்டாய ராணுவ பயிற்சி அமெரிக்காவில் 1973 இலும், பிரிட்டனில் 1960 இலும் அமுலில் இருந்தது.

சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் கட்டாய பயிற்சி வழங்கப்படுகிறது.வடகொரியாவில் ஆண்கள் 11, பெண்கள் 7 ஆண்டுகளும், இஸ்ரேலில் ஆண்கள் 3, பெண்களுக்கு 2 ஆண்டுகளும் இராணுவ பயிற்சி பெற வேண்டும்.

ஈரானில் ஆண்கள் 2 ஆண்டுகள் இராணுவ பயிற்சி பெற வேண்டும். டாக்டர்கள் மற்றும் தீயணைப்பு படையினரின் மகன்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: