Type to search

இஸ்லாமிய புனித இடங்களில் நிர்வாண போட்டோஷூட் (புகைப்படம் உள்ளே)!

France France Top Story WORLD

இஸ்லாமிய புனித இடங்களில் நிர்வாண போட்டோஷூட் (புகைப்படம் உள்ளே)!

Share
 • 13
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  13
  Shares

யூத மதத்தவர்களின் மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் மேற்கு சுவர் முன்னால் ஒரு பெல்ஜிய கலைஞர், நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது இஸ்ரேலில் அவருக்கு கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. model nudee photo shoot spread controversy

மரிசா பாபென், ஜெருசலேமில் மேற்கு சுவரை பார்த்தபடி ஒரு கட்டடத்தின் மொட்டைமாடி மீது நிர்வாணமாக ஒரு நாற்காலியில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த நிகழ்வு மிகவும் துயர் தரும் செயல் என மேற்கு சுவரின் மதகுரு விவரித்துள்ளார்.

கடந்த ஆண்டு பழமையான லக்ஸரில் உள்ள எகிப்து கோயில் ஒன்றில் அவர் நிர்வாணமாக எடுத்த படங்கள் காரணமாக சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் ”அவமானத்தின் சுவர்” எனும் தலைப்பில் அவரது சொந்த இணையதளத்தில் புகைப்படத்துடன் ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளார். ”தலைப்பை பார்த்து புத்தகத்தை எடைபோடாதீர்கள். என்னுடைய மின்னஞ்சலில் அச்சுறுத்தல்களும், உங்களது கோபம் கொப்பளிக்கும் எதிர்வினைகளும் நிறையும் என்பது எனக்குத் தெரியும்.

எனக்கு எதிராக கருத்து கொண்டிருக்கும் மக்களுக்கு நான் ஓன்றை சொல்லிக் கொள்கிறேன். உங்களது சக்தியை சேமியுங்கள். ஏனெனில் நான் உங்கள் கருத்துக்களை படிக்கக்கூட மாட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.

“நம் உடலிலுள்ள பாலுறுப்புகள் உட்பட உலகில் உள்ள அனைத்தையும் கடவுள்தான் படைத்தார் என்று நம்புபவர்கள், உடலின் தோலைக் காட்டுவதை நினைத்து கோபப்படுவது எனக்கு குழப்பமாக உள்ளது,” என்று அவர் கூறியுள்ளார்.

எகிப்துக்கு நான் சென்றதில் கிடைத்த அனுபவங்களால் மதம் மற்றும் அரசியலுக்கான எல்லைகளை புறந்தள்ள அத்துடன் சுதந்திரம் என்பது மிகவும் ஆடம்பரமான விஷயமாக மாறிவரும் உலகத்தில் எனது சொந்த மதத்தை காட்ட விரும்பினேன் ” என எழுதியுள்ளார்.

இஸ்ரேலில் அவர் மூன்று நாள் பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டின் 70-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் மே மாதத்தில் ஜெருசலேமில் சர்ச்சைக்குரிய அமெரிக்க தூதரக திறப்பு விழா ஆகியவையும் தற்செயலாக நடந்தன என அவர் கூறுகிறார்.

அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அம்மாடல் சாக்கடலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை காட்டுகிறது. மேலும் மற்றொரு புகைப்படத்தில் இஸ்ரேலிய கொடிகம்பத்தின் மேல் அவர் விரிந்து கிடக்கிறார்.

ஆனால் பெருமளவில் ஆத்திரத்தை கிளம்பியிருக்கும் புகைப்படம் மேற்கு சுவரை நோக்கி நிர்வாண கோலத்தில் பாபென் எடுத்துக்கொண்ட புகைப்படமே.

model nudee photo shoot spread controversy

விவிலிய 2 ஆவது யூத ஆலய காலத்தின் மிச்சம் மற்றும் யூத மதத்தவர்கள் வழிபாடு செய்யும் புனிதமான இடமாகவும் மேற்கு சுவர் கருதப்படுகிறது. இப்புகைப்படங்களுக்கு யூத மதத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் உடனடியாக கண்டனம் தெரிவித்தனர்.

மேற்கு சுவரின் மதகுரு அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ரப்பியான, ஷ்முவேல் ரபினோவிச் எடியொத் அஃஹ்ரானோத் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்நிகழ்வு அவமானகரமான துயர் தரும் ஒன்று எனவும் மேற்கு சுவரின் புனிதத்தையும் அந்த புனிதமான இடத்திற்கு வருபவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் சிலர் செல்வி பாபென் யூத எதிர்ப்பாளர் என்றும் வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் உணர்வை பாதுகாக்க இஸ்லாமிய புனித இடங்களில் போட்டோஷூட் நடத்துவதை தவிர்த்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த செப்டெம்பரில் இம்மாடல் எகிப்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும் பலருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பழைமைவாத இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்நாட்டில் சன்கிளாஸ் விளம்பரம் ஒன்றிற்காக நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அவர் எகிப்து நாட்டின் அதிகாரிகளிடம் புகைப்படங்கள் எடுப்பதற்கான அனுமதியை பெறவில்லை. மேலும் கெய்ரோவில் பிரமிடுகளில் அவர் போட்டோஷூட் எடுத்து கொண்டிருக்கும்போது ஒரு பொலிஸ் அதிகாரிக்கு அவரும் அவரது ஒளிப்படவியலாளரும் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக பின்னர் தெரிவித்தார்.

இரண்டு வழிபோக்கர்கள் எதிர்மறை விமர்சனம் வைத்தது குறித்து விவரிக்கும் பாபென் ” நாங்கள் எகிப்திய கலாசாரத்தை உயர்வாக மதித்து கலையுணர்வோடு புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறோம் என விவரிக்க முயற்சித்தோம். ஆனால் அவர்களுக்கு நிர்வாணத்துக்கும், கலைக்கும் இடையிலான தொடர்பை பார்க்கவில்லை. அவர்கள் கண்களுக்கு அது ஆபாசமாகவோ அல்லது அதேபோன்றதொரு வேறொரு விஷயமாகவோ தெரிந்தது” என்றார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


 • 13
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  13
  Shares
Tags: