Type to search

பிரான்ஸில், பாதைகளில் மிதக்கும் சிமெந்திலான தூண்கள்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், பாதைகளில் மிதக்கும் சிமெந்திலான தூண்கள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில், பாதசாரிகள் கடவை முப்பரிமாணத்தில் தோன்றுவது போல் உருவாக்கப்பட்டது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. Paris 14th street changed 3D crossing

கடந்த பல வருடங்களாக வீதிகளில் உள்ள பாதசாரிகள் கடவையில், வாகனங்கள் தரித்து நிற்கச் செய்வது பெரும் போராட்டமாக இருந்தது. இது தொடர்பில் அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தானியங்கி சேவையினை அகற்றி விட்டு, தனியே எச்சரிக்கை பலகைகளை வைத்து பார்த்தனர். இந்த மாற்றமானது பல்வேறு தரப்பட்ட ஆராய்ச்சிகளின் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், முதன் முறையாக முப்பரிமாண பாதசாரி கடவைகள் பரிஸில் சோதனையிடப்பட்டுள்ளது.

நிலத்தில் இருந்து ஒரு அடி உயரத்தில் சிமெந்திலான தூண்கள் மிதப்பது போன்று காட்சி அளிக்கும் இந்த கடவை, வாகன ஓட்டிகளுக்கு மிக விரைவாக கண்ணில் தென்படும் எனவும், அது வேகமாக அவர்களது கவனத்தை ஈர்க்கும் எனவும், இதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களில், இந்த புதிய முப்பரிமாண கடவைகள் பல நாடுகளில் சோதனையிடப்பட்டு வருவதும், அந்த வரிசையில் பிரான்ஸில் அறிமுகமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர, முதல் கட்ட இந்த நடவடிக்கை பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: