Type to search

12 வயது பிரான்ஸ் சிறுவனின் சாதனை!

France France Head Lines WORLD

12 வயது பிரான்ஸ் சிறுவனின் சாதனை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன் டொம் கொரோன் தனியாள் படகொன்றில் 60 மைல் தூர கடற்பயணத்தினை 14 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களில் மேற்கொண்டு பிரான்ஸின் வடகடலைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். 12 year old child drive boat 60 mile alone

கடந்த புதன்கிழமை, குறித்த சிறுவன் தனது தந்தையின் கண்காணிப்பில் இச்சாதனையினை நிகழ்த்தியுள்ளார். மேலும், இப்பயணத்தின்போது மணித்தியாலத்திற்கு 4.19 மைல் தூரத்தினை கடக்கும் வேகத்தில் படகினைச் செலுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள isle of white தீவில் தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த சிறுவன், வடபிரான்ஸின் Cherbourg இல் தமது பயணத்தினை முடித்துள்ளான். பயணம் முடிவடைந்ததும், அவரது வருகையினை எதிர்பார்த்து ஊடகவியலாளர்கள் அங்கு காத்திருந்தனர்.

தமது 8 வயது முதலே படகு செலுத்துவதில் ஆர்வம் கொண்டு பல படகுப்போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதாக டொம் தெரிவித்தார்.

டொம், கடந்த 2006 இல் பிரிட்டனி கிண்ணக் கடலோடும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு இவர் பிரான்ஸின் சிறந்த கடலோடி போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறி கலந்துகொண்ட 60 போட்டியாளர்களுள் 6 ஆவது இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •