Type to search

மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதல்!

France France Head Lines WORLD

மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதல்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

Gao இல் நிலைகொண்டுள்ள பிரெஞ்சு இராணுவத்தினர் மீது பயங்கரவாத தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. Terrorists attack Mali french soldiers

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலி நாட்டின் வடக்கு பகுதியான Gao இல் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலில் நான்கு பிரெஞ்சு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் மாலி நாட்டின் மிக முக்கியமான நகரிலே இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் மொத்தமாக 23 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும், அதில் நால்வர் இராணுவத்தினர் எனவும், பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டதாகவும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு இராணுவ பரிஸ் தலைமையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரெஞ்சு இராணுவத்தினர் யாரும் கொல்லப்படவில்லை’ என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாலி நாட்டில் தற்போது 4,000 பிரெஞ்சு இராணுவத்தினர் l’opération Barkhane எனும் யுத்தத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: