Type to search

19 வயதான பிரான்ஸ் அணி வீரரின் நெகிழ்வான செயல்!

France France Top Story WORLD

19 வயதான பிரான்ஸ் அணி வீரரின் நெகிழ்வான செயல்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

உலகக்கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் மாற்றுதிறனாளி மற்றும் ஆதரவற்றோரின் விளையாட்டுக்காக செலவழிக்க உள்ளதாக பிரான்ஸ் வீரர் கிலியான் மப்பே தெரிவித்துள்ளார். 19 year KylianMbappe donate salary handicap children

ரஷ்யாவில் இடம்பெறுகின்ற உலகக்கோப்பை தொடரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த நாக்-அவுட் போட்டியில், கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெளியேற முக்கிய காரணமாக 19 வயதான பிரான்ஸ் அணி வீரர் மப்பே இருந்துள்ளார்.

இவர் அடித்த இரண்டு கோல்களால் அர்ஜென்டினா அணி வெளியேறியது. இந்த போட்டியினால் உலகம் முழுவதும் பிரபலமடைந்த மப்பே, தற்போது இன்னொரு நெகிழ்வான செயலாலும் அனைவரின் பாராட்டுதலுக்கும் உள்ளாகியுள்ளார்.

இந்த உலககோப்பையில் அவர் விளையாடுவதால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் அனைத்தையும் பிரான்ஸில் உள்ள ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் விளையாட்டுக்காக செலவிடவுள்ளார்.

அவர் மொத்தமாக இந்திய மதிப்பில் ரூ.2 கோடியை செலவிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் அணியில் முன்கள வீரராக இருக்கும் மப்பே, பிஎஸ்ஜி கிளப் அணியிலும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: