Type to search

சிறைக்கு பார்க்க வந்ததே தப்பிக்க வைக்க – Brahim Faïd!

France Top Story

சிறைக்கு பார்க்க வந்ததே தப்பிக்க வைக்க – Brahim Faïd!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கடந்த ஞாயிறுக்கிழமை காலை சிறையில் இருந்து தப்பித்த Redoine Faïd, அதற்கு சற்று முன்னதாக அவனுடைய சகோதரன் Brahim Faïd இனை சிறையில் சந்தித்திருந்தான். அதன்பின்னர் காவல்துறையினரால் Brahim Faïd கைது செய்யப்பட்டார். Escaped prisoner Redoine Faïd brother arrested

ஞாயிற்றுக்கிழமை காலை சிறைச்சாலையில், பார்வையாளர் சந்திப்பின் போது Redoine Faïd, அவனுடைய சகோதரனை சந்தித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே உலங்குவானூர்தியில் வந்த ஆயுததாரிகள் அவனை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, Brahim Faïd கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 46 வயதான Brahim Faïd 24 மணிநேரங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். விசாரணையின் போது ‘அவன் தப்பிச் சென்றது தொடர்பாக நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!’ என Brahim Faïd குறிப்பிட்டார்.

Brahim Faïd விசாரணைகளை தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்பட்டார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: