Type to search

ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான காரியம்!

France France Top Story WORLD

ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான காரியம்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

Saint-Brieuc இல் வசிக்கும் நபர் ஒருவர், அவரின் 1 வயதும் 6 மாதமுமான பெண் குழந்தையை வீட்டின் அறை ஒன்றுக்குள் வைத்து பூட்டிவிட்டு, விருந்துக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் நள்ளிரவில் குறித்த குழந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. France Saint-Brieuc person locked child room

கடந்த சனிக்கிழமை இரவு, Saint-Brieuc இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு கடந்து 2.30 மணி அளவில் குழந்தை அழுகின்ற சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவினை உடைத்து உள்ளே இருந்த 18 மாத குழந்தையை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர், சில மணி நேரம் கழித்து விருந்து முடித்து வீடு திரும்பிய அக் குழந்தையின் தந்தை, வீட்டின் கதவு உடைபட்டிருந்ததையும், குழந்தை காணாமல் போனதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.

நிறைந்த மது போதையில் காரை ஓட்டிக்கொண்டு காவல்நிலையத்துக்கு வந்த நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: