Type to search

பிரான்ஸில் மேற்கொள்ளவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

France France Head Lines WORLD

பிரான்ஸில் மேற்கொள்ளவிருந்த பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரான்ஸிலுள்ள செந்தனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இரண்டு பெல்ஜியர்கள் திட்டமிட்டிருந்தனர். இத் தாக்குதல் பெல்ஜிய காவல்துறையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. France Villepinte terrorist attack prevented Belgium police

ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட குறித்த இரு பயங்கரவாதிகளும், Villepinte (Seine-Saint-Denis) இல் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக பெல்ஜிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி இருவரும், ப்ரூஸ்லஸின் Woluwe-Saint-Pierre பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கைது செய்யப்படும் போது அவர்களிடம் சில ஆயுதங்களும், 500 கிராம் எடையுள்ள வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் எனவும், இது தொடர்பாக பெல்ஜிய பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இந்த வெடி மருந்துகள் லக்ஸ்ம்பேர்க் நாட்டில் இருந்து பயங்கரவாதிகளுக்கு வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: