Type to search

பரிஸின் ஹீரோவின் தற்போதைய நிலை!

France France Head Lines WORLD

பரிஸின் ஹீரோவின் தற்போதைய நிலை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பரிஸின் ஹீரோ என அழைக்கப்படும் Mamoudou Gassama, ஜூலை 1 ம் திகதி உத்தியோகபூர்வமாக பரிஸின் தீயணைப்புத்துறையில் இணைந்து கொண்டார். Paris hero Mamoudou Gassama joined fire department

பரிசிலுள்ள கட்டிடம் ஒன்றின் நான்காவது தளத்தில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை வெற்றுக்கைகளால் கட்டிடத்தில் ஏறி குழந்தையை காப்பாற்றிய Mamoudou Gassama வை உடனடியாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் சந்தித்து குடியுரிமை வழங்கியதுடன், தீயணைப்பு துறையில் வேலையும் தருவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் ஜூலை 1 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் சேர்ந்தார். அவருடன் சேர்த்து மொத்தம் 23 பேர் பணியில் இணைந்து கொண்டனர்.

மேலும் Mamoudou Gassama, பத்து மாத ஒப்பந்தத்திலேயே பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் பணி நிரந்தரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டைச் சேர்ந்த Mamoudou Gassama, கடந்த மே 27 ஆம் திகதி, பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏறியே குழந்தையை காப்பாற்றியிருந்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: