Type to search

பெண்களின் உடல் முடியை காட்டிய விளம்பரம்!

France France Top Story WORLD

பெண்களின் உடல் முடியை காட்டிய விளம்பரம்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

உடலில் முடி அனைவருக்கும் உள்ளது. இந்த சாதாரண விஷயம், அமெரிக்காவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வதைக் காட்டும் ஒரு புதிய ரேஸர் விளம்பரம் வெளியானது. இதுவே இந்த விவாதத்தின் தொடக்கப்புள்ளி. woman’s body hair advertisement

இது புரட்சிகரமான விளம்பரம் அல்ல. ஆனால், வழக்கமான ரேஸர் விளம்பரங்களில் முற்றிலும் மென்மையானதாக இருக்கும் பெண்களின் கால்களே காட்டப்படும்.

இந்த 100 வருடத்தில் ரேஸர் விளம்பத்தில் பெண்களை முடியுடன் காட்டுவது இதுவே முதல் முறை என ரேஸர் நிறுவனமான பில்லி கூறுகிறது. இதனால் இந்த விளம்பரம் வைரல் ஆனது.

இந்த விளம்பரத்தில் பெண்களின் கால், கழுத்து மற்றும் வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதை பல பெண்கள் சமூகவலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர்.

‘உடலில் முடி இருந்தால் வெட்கப்பட வேண்டும் எனும் கருத்து உருவாக்கப்படுகிறது.. பெண்களுக்கு, முடியற்ற உடல் இருப்பதாக அனைத்து நிறுவனங்களும் நிறுவ முயலும்போது, இந்த விளம்பரம் உண்மையை பிரதிபலிக்கிறது” என பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர் கூறியுள்ளார்.

இவ் விளம்பரம் உடல் முடி பற்றி இன்னும் நேர்மறையாக நினைக்க, உதவுவதாக இதனை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

இந்த விளம்பத்திற்கு ஆதரவு பெருகிக்கொண்டிருக்கும் நிலையில், உடலில் முடிகள் இருப்பதைச் சமூகம் இழிவாக கருதுவதை ஏன் இந்த ரேஸர் விளம்பரம் மாற்ற முயல்கிறது என சிலர் கேட்டுள்ளனர்.

ஷேவ் செய்வது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பெண்கள் தங்கள் முடியை என்ன செய்ய வேண்டும் என யாரும் பெண்களிற்கு சொல்ல முடியாது” என்கிறார் பில்லி நிறுவனத்தின் இணை நிறுவனர்.

மேலும் அவர் ”நம்மில் சிலர் முடியை எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். சிலர் முடியைப் பெருமையுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். நமது முடிவுக்காக வருத்தப்படக்கூடாது” என தெரிவித்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: