Type to search

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய 16 வயதான இளைஞர்கள் கூட்டம்!

France France Top Story WORLD

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய 16 வயதான இளைஞர்கள் கூட்டம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸில், மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனை, பணத்துக்காக 20 நபர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 20 youth attacked 14 year old handicapped child

கடந்த திங்கட்கிழமை இரவு, பொபினியில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளான். அவனிடம் இருந்த பணப்பையை திருடுவதற்காகவே அவன் தாக்கப்பட்டுள்ளான்.

Rue du Bois d’Amour பகுதியில் சென்றுகொண்டிருந்த குறித்த சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகியோரை சுற்றி வளைத்த 20 இளைஞர்கள் இருவரையும் கண்மூடித்தனமாக, கொடூரமாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர் அவர்களிடம் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

இச்சம்பவம் இரவு 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இரும்பு கம்பிகள் மற்றும் கற்கள் கொண்டு அவர்களை தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வருவதற்குள் குறித்த கும்பல் பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் 16 வயதுடைய சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளனர். இது பற்றிய மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: