Type to search

பிரான்ஸில் நடு இரவில், நடு வீதியில் அடிக்கடி இடம்பெறும் தாக்குதல்கள்!

France France Head Lines WORLD

பிரான்ஸில் நடு இரவில், நடு வீதியில் அடிக்கடி இடம்பெறும் தாக்குதல்கள்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பிரான்ஸில் நடு வீதியில் வைத்து நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். கைது செய்யப்பட்ட கொலையாளி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளார்.  Pantin knife attack- attacker arrested

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி அளவில் Pantin இல் உள்ள Avenue Jean Lolive, rue Eugène மற்றும் Marie Cornet ஆகிய மூன்று வீதிகள் இணையும் சந்தியில் வைத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவு 11 மணி அளவில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் இரத்தம் வெளியேறி மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட அப்பகுதி காவல்துறையினர், தாக்குதலாளியை நேற்று கைது செய்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்திகுத்துக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதவிர, கொல்லப்பட்ட நபருக்கு தொண்டைப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள நபர் விசாரணைகளில் எதுவும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: