Type to search

பிரான்ஸ் விளையாட்டு ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

France France Head Lines WORLD

பிரான்ஸ் விளையாட்டு ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

வருகின்ற வெள்ளிக்கிழமை இடம்பெறும் கால் இறுதி உதைப்பந்தாட்ட போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றால், பரிஸில் மிகப்பெரிய திரை அமைத்து போட்டிகள் ஒளிபரப்பப்படும் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ உறுதியளித்துள்ளார். Paris mayor said build largest screen watch matches

பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தனது டுவிட்டர் கணக்கில் ‘எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரான்ஸ் – உருகுவே அணிகளுக்கு இடையே இடம்பெற உள்ள காலிறுதி போட்டியில் பிரெஞ்சு அணி வெற்றி பெற்றால், அதன் பிறகு பிரெஞ்சு அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியினையும் மிகப்பெரிய திரையில் கண்டுகளிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், பரிஸ் மாநகர மண்டபத்துக்கு முன்னால் மிகப்பெரும் திரை ஒன்று அமைக்கப்படும் என தாம் உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், பொது இடங்களில் திரை அமைத்து மக்களை சேர்ப்பது பிரான்ஸில் தடை செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து உள்துறை அமைச்சு இந்த முடிவினை எடுத்தது.

இந்நிலையில் ஆன் இதால்கோ இந்த முடிவினை அறிவித்துள்ளமை பரிஸ் நகர விளையாட்டு ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக பலர் சமூகவலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares