Type to search

காவற்துறை அதிகாரியின் தாக்குதலால் தொடர்ச்சியான போக்குவரத்து தடை!

France France Head Lines WORLD

காவற்துறை அதிகாரியின் தாக்குதலால் தொடர்ச்சியான போக்குவரத்து தடை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு Nantes நகரில் 22 வயதுடைய இளைஞன் சுடப்பட்ட வழக்கு தொடர்பாக தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில், தற்போது துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். France Nantes public transport ban

நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12.40 மணியளவில் IGPN அதிகாரிகள் குறித்த காவல்துறை அதிகாரியை விசாரணைகளுக்கு உட்படுத்தினர். ஆனாலும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில், Nantes நகரம் முழுவதும் வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்த தாக்குதலிற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரி, சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தியே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாள் இரவுகளில் வன்முறைகள் வெடிப்பதால் பல பொது சொத்துக்கள் சேதமாகியுள்ளன. மற்றும் புதன்கிழமை இரவு 50 வாகனங்கள் வரை எரியூட்டப்பட்டுள்ளன.

இதனால், நேற்று வியாழக்கிழமை இரவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை வரை பொது போக்குவரத்துக்கள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தங்கள் இன்றும் நாளையும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: