Type to search

பிரான்ஸில், பொலிஸாரின் வன்முறையால் கலவரம்!

France France Head Lines WORLD

பிரான்ஸில், பொலிஸாரின் வன்முறையால் கலவரம்!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

Nantes நகரில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது நாளாக வன்முறைகள் நீடிக்கின்றன. Police shooting riot chaos- youths burned vehicles

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, காவல்துறையினரின் விசாரணைகளின் போது 22 வயதுடைய Aboubakar F எனும் நபர் கொல்லப்பட்டார். குறித்த நபர் தேடப்பட்டுவந்த குற்றவாளி எனவும், போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் எனவும், தப்பிச்செல்ல முற்பட்டதாலேயும் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இதனால், செவ்வாய்க்கிழமை இரவு Nantes நகரின் பல்வேறு பகுதிகள் இளைஞர்களால் சூறையாடப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாள் இரவும் வன்முறைகளும், கலவரங்களும் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்த பேருந்துகளை கொழுத்தியும், கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியும் வன்முறையில் பலர், குறிப்பாக இளைஞர்கள் ஈடுபட்டனர். மொத்தமாக ஐம்பது வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதவிர, Saint-Herblain காவல்நிலையத்துக்குள் பெற்றோல் எரிகுண்டும் வீசப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த அரசு, கலவரம் அடக்கும் படையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்தியது. ஆனாலும், அதிகாலை வரை வன்முறைகள் வெடித்துள்ளன.

இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, இரவு வன்முறையில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் நால்வர் சிறுவர்கள் எனவும், 11 பேர்கள் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: