Type to search

பரிஸில் புகை பிடிக்க தடை!

France France Top Story WORLD

பரிஸில் புகை பிடிக்க தடை!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

பரிஸில் உள்ள பூங்காக்களில் புகைப்பிடித்தல் தடை செய்யப்படவுள்ளது. பரிஸ் மாநகர மண்டபம், பல்வேறு காரணங்கள் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது. Smoking ban Paris parks

இந்த நடவடிக்கை முதல் கட்டமாக பரிஸில் உள்ள முக்கிய நான்கு பூங்காக்களில், அடுத்துவரும் நான்கு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்டம் விரைவில் நிரந்தரமாக்கப்பட உள்ளது. இது குறித்து பரிஸ் நகர அரச அதிகாரி Laurence Goldgrab தெரிவிக்கும் போது, பரிஸ் மாநகரம் தொடர்ச்சியாக புகைப்பிடித்தலுக்கு எதிராக போராடி வருகிறது. அதன் முதல் கட்டம் தான் இது.

பொது இடங்களில் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்கவும், புகை பிடிக்காதவர்களிற்கு மதிக்கும் எண்ணத்தோடும் பொது பூங்காக்களில் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட உள்ளது’ என குறிப்பிட்டார்.

2017ம் ஆண்டில், குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்த போதும் வீதியில் 350 தொன் சிகரெட் துண்டுகள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், இதற்கான செலவீனங்களை சிகரெட் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அரசு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் அதை சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: