Type to search

கோடைகால கொண்டாட்டங்கள் பாதிப்பு!

France France Top Story WORLD

கோடைகால கொண்டாட்டங்கள் பாதிப்பு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

இன்று (ஜூலை 6) வெள்ளிக்கிழமை பிரெஞ்சு இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ரயில் சேவைகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைப் பற்றி இங்கே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். Summer holiday trips affected due_to railway staff protest

இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸில் CGT மற்றும் Sud-Rail ஆகிய இரண்டு இரயில் தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. பிரான்ஸில் தற்சமயம் கோடை விடுமுறை ஆரம்பித்துள்ளதால் இவ் வேலைநிறுத்தங்கள் மக்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

இன்று, சராசரியாக TGV மற்றும் TER ரயில்களில் ஐந்தில் நான்கு சேவைகளும், 3 Intercité ரயில்களில் 2 உம், 4 Transilien ரயில்களில் 3 உம் சேவையில் ஈடுபடும் என SNCF அறிவித்துள்ளது.

சர்வதேச சேவைகளான யூரோஸ்டார், Thalys மற்றும் பிரான்ஸ்-ஸ்பெயின் இணைப்பு சேவைகளில் இயங்கும் ரயில்கள் சாதாரணமாக வழமையான நாட்களில் இயங்குவது போல் சேவையில் ஈடுபடும். பிரான்ஸ், ஜேர்மனி வழித்தடங்களில் சேவைகள் கிட்டதட்ட இயல்பாக இருக்கும்.

இருப்பினும், பல மாதங்களாக தொடரும் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு இரயில் ஓட்டுநர்கள் பலவீனமடைந்ததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மிகக் குறைவாகவே இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த வார இறுதியில் தடைப்படும் ரயில் சேவைகள் பற்றிய விபரங்களை அறிய விரும்பினால், SNCF ன் வலைத்தளத்தைப் பார்க்கவும்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags:

You Might also Like