Type to search

11 வயது சிறுவனுக்கு அடித்த அதிஷ்டம்!

France France Head Lines WORLD

11 வயது சிறுவனுக்கு அடித்த அதிஷ்டம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

நைஜீரியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 2 மணி நேரத்தில் தன்னை சித்திரமாக தீட்டிய 11 வயது சிறுவனை மனமுவந்து பாராட்டினார். 11 year boy draw macron image- got macron’s blessing

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் இருநாள் அரசுமுறை பயணமாக நைஜீரியா நாட்டுக்கு சென்றார்.

அபுஜா நகரில் நைஜீரிய அதிபர் முஹமது புஹாரியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக மக்ரோன் ஆலோசனை நடத்தினார்.

பிரான்ஸ் நாட்டில் எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள நைஜீரியா கலாசார விழா தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக லாகோஸ் நகருக்கு கடந்த செவ்வாய்கிழமை இமானுவேல் மக்ரோன் சென்றார்.

அங்குள்ள நியூ ஆபிரிக்கா ஷ்ரைன் என்னும் ஓவிய கலைக்கூடத்தை அவர் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரான்ஸ் அதிபர் அங்கு வரும் தகவல் தெரிந்ததும் ஓவியக் கலையில் ஆர்வம்கொண்ட கரீம் வாரிஸ் ஒலமிலேக்கான் என்ற 11 வயது சிறுவன், பென்சில் மற்றும் கரி ஆகியவற்றை பயன்படுத்தி 2 மணி நேரத்துக்குள் இமானுவேல் மக்ரோனை அழகிய சித்திரமாக தீட்டி முடித்தான்.

மிகவும் தத்ரூபமாக வரையப்பட்ட அந்த சித்திரத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த பிரான்ஸ் அதிபர் அந்த சிறுவனை மகிழ்ச்சியுடன் பாராட்டி, ஆசி கூறியதுடன் இச்சம்பவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: