Type to search

பாலியல் சுற்றுலா இணைய கும்பலின் ஏமாற்று செயல்!

France France Top Story WORLD

பாலியல் சுற்றுலா இணைய கும்பலின் ஏமாற்று செயல்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

பாலியல் தொழிலை சட்டவிரோதமாக, பரிஸின் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொண்டுவந்த ஒரு குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Illegal prostitution business gang arrested

பரிஸில் 8 ஆம் மற்றும் 16 ஆம் வட்டாரங்களில் இளம்பெண்களை வைத்து நீண்ட மாதங்களாக பாலியல் தொழில் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இவர்கள் ‘பாலியல் சுற்றுலா’ என இணையத்தளங்களில் விளம்பரங்கள் மேற்கொண்டு உள்நாட்டிலும், சர்வதேசத்தில் இருந்தும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளனர்.

இதற்கு கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் €50 இலிருந்து €200 வரை பெற்றுள்ளனர். பரிஸுக்குள் 8 ஆம் மற்றும் 16 ஆகிய இரு வட்டாரங்களிலும் ஏழு இடங்களை இவர்களது தொழிலுக்காக பயன்படுத்தி வந்துள்ளனர்.

நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த காவல்துறையினர், நேற்று ஐந்து பெண்கள் உட்பட மேலும் சில ‘முகவர்களை’யும் கைது செய்துள்ளனர். அத்துடன் பல ஆடம்பர கடிகாரங்களையும், €20,000 ரொக்க பணத்தினையும் மீட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத தொழில் மூலம் ஒரு நாளுக்கு €1,000 வரை சம்பாதித்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்களில் எகிப்து, பாலஸ்தீனம், சேர்பியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கியூபா நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகிறது.

இது தவிர, சமீபத்தில் AirBnb சேவையை பயன்படுத்தி பாலியல் தொழில் மேற்கொண்டுவந்த பலரை காவல்துறையினர் கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: