Type to search

பிரான்ஸில் ஒரே குடும்பத்தின் மூன்று பிள்ளைகள் பலி- அரசு விடுத்த எச்சரிக்கை!

France France Top Story WORLD

பிரான்ஸில் ஒரே குடும்பத்தின் மூன்று பிள்ளைகள் பலி- அரசு விடுத்த எச்சரிக்கை!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

பிரான்ஸின் வார இறுதியில், ஒரு சகோதரி மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் ஏரிக்குள் மூழ்கி இறந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் பிரெஞ்சு அதிகாரிகள் கோடை விடுமுறையில் எச்சரிக்கையுடன் நீச்சல் விளையாட்டுகளில் ஈடுபடுமாறு மீண்டும் எச்சரித்துள்ளனர். 3 children drown France lake- summer changes

கிழக்கு பிரான்ஸில் உள்ள Chalon-sur-Saône நகரப்பகுதியிலுள்ள ஒரு செயற்கை ஏரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

9 வயதான சிறுமி மற்றும் அவரது 10 மற்றும் 13 வயதான இரண்டு சகோதரர்களே அந்த ஏரியில் கால் நனைப்பதற்காக சென்ற வேளையில் தவறி விழுந்து மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு 10’C க்கும் குறைவான வெப்பத்தில் நீந்தவோ, மூச்சு பிடித்து நிற்கவோ தெரியாது என அறிக்கைகள் தெரிவித்தன.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டாலும், அவர்களை உயிருடன் காப்பாற்ற முடியாமல் போனது.

நகரத்தின் மேயர் அதிர்ச்சியடைந்ததுடன், இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போது ‘இந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு முழுமையான துயரம் என தெரிவித்தார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: