Type to search

பரிஸ் வீதிகளில் இளம் பருவத்தினரின் செயலால் திணறும் மக்கள்!

France France Top Story WORLD

பரிஸ் வீதிகளில் இளம் பருவத்தினரின் செயலால் திணறும் மக்கள்!

Share
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share

கடந்த 4 மாதங்களாக வீதிகளில் பயணிப்பவர்கள் உட்பட பலரிடம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக ஐந்து சிறுவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். France Paris youths robbery group arrested

கடந்த 4 மாதங்களாக இவர்கள் பரிஸின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர். தங்களது இடுப்புப்பட்டி மூலம் பலரை திடீரென தாக்கி அவர்களை நிலை குலைய வைத்து, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் தொலைபேசிகளை திருடியுள்ளனர்.

இவர்களால் இதுவரை 8 பேர் வரை மோசமாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பொதுவாக 14 ஆம் வட்டாரத்தில் உள்ள தொடரூந்து தண்டவாளத்தின் அண்மித்த பகுதிகளில் கொள்ளையை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அப் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த காவல்துறையினர், அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், இக்கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் இளம் பருவத்தினர் எனவும், அக் குழுவின் தலைவராக செயற்பட்ட நபரை காவல்துறையினர் பின் தொடர்ந்து, அதன் பின்னரே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவர்கள் மொத்தமாக 17 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்


  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    1
    Share
Tags: